Sunday, January 1, 2012

பெண்கள் கற்பழிப்பிற்கு அவர்களின் ஆடைகளே பிரதான காரணம் - டி.ஜி.பி


ஐதராபாத்:பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதற்கு பெண்களின் ஆடைகள், ஆண்களை கவர்ச்சியூட்டி கவர்ந்திழுப்பதே முக்கிய காரணம். என ஆந்திரமாநில டி.ஜி.பி., தினேஷ் ரெட்டி கூறியுள்ளார். அவர் கூறியது நடைமுறை உண்மை என்பது சாமான்ய மக்களுக்கு நன்கு புரியும்.ஆனால் வழக்கம்போல் இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, டி.ஜி.பி.,யின் கருத்து முறையானதல்ல. அரசாங்கமோ அல்லது போலீசாரோ பெண்கள் என்ன அணிய வேண்டும் என்பது பற்றி முடிவு செய்ய முடியாது. பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்வதற்கு பல காரணங்கள் இருக்கும். ஆனால் அதனை தடுப்பதும், பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதுமே முக்கியம் என கூறினார்.


இதில் வேடிக்கை என்னவேன்றால் டி.ஜி.பி கற்பழிப்பிற்கு ஆடைகள் மட்டுமே காரணம் என்று அவர் கூறவில்லை மாறாக பெண்களின் ஆபாசமான ஆடைகள் கற்பழிப்பிற்கு வழிவகுக்கின்றன என்பது தான்.

எல்லோருக்கும் முஸ்லீம் பெண்கள் போல் உடை கொடுக்க வேண்டும் என்றோ  , இதற்கு சட்டம் திருத்தவேண்டும் என்றோ அவர் கூறவில்லை. தனது துறையில் அவரின் அனுபவத்தின் வாயிலாக அவர் கண்ட விஷயங்களை கூறியுள்ளார். இதற்கே இவ்வளவு எதிர்ப்பு.

அடுத்து...

மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறுகையில், டி.ஜி.பி., கருத்தில் உடன்பாடு கிடையாது. நாட்டில் உள்ள அனைவருக்கும் என்ன அணிய வேண்டும் என்பதை உரிமை செய்ய அவர்களுக்கு உண்டு. இதனை கொள்கையாக மாற்ற முடியாது. இது போன்ற கருத்து மாநில டி.ஜி.பி.,யிடமிருந்து வரும் என எதிர்பார்க்கவில்லை என கூறினார்.

எதார்த்த உலக நிகழ்வுகளை கூட புரிந்துகொள்ள முடியாதவர் நம் மத்திய உள்துறை அமைச்சர்  வெளங்கிடும் இந்தியா !!!

ஒரு சந்தேகம்...

ஒரு பெண் தான் என்ன உடை அணியவேண்டும் என்பதை அவள் தான் தீர்மானிக்க வேண்டும் ஓகே சரி. ஆனால் தான் என்ன உடை அணிய வேண்டும் என்பதை எதை வைத்து தீர்மானிப்பது ?

அவர் அவர் விருப்பம் அப்படி தானே ?

ஒரு பெண் தான் அழகானவள் என்று தம்பட்டம் அடிக்க ஆபாசமான ஆடையை அணிகிறாள் - அது ஆணாதிக்கசக்தின்யின் பார்வையில் பெண் சுதந்திரம். ( ஏனெனில் அது சுய விருப்பத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாம்)
ஆனால் ஒரு முஸ்லீம் பெண் இறைவன் கட்டளையை ஏற்று சுய விருப்பத்தின் பெயரில் பர்தா அணிந்தால் அது பெண் அடிமைத்தனமாம் (?) ஏன் ?   ஏனெனில் இஸ்லாம் அவர்களை பர்தா அணிய சொல்லி நிர்பந்திகிறதாம்..

இஸ்லாம் மார்க்கத்திலேயே நிர்பந்தம் கிடையாது என்னும்போது பர்தா விஷயத்தை நாம் விளக்க வேண்டியதில்லை.இருப்பினும் சில அடிப்படை விஷயங்களை புரிந்துகொள்ளாமல் சிலரால் வைக்கப்படும் அரைவேக்காட்டு வாதங்களுக்கு புரியும்படி சொல்லிகொள்கிறோம்.

ஒரு பள்ளிகூடத்தில் உங்கள் பிள்ளையை படிக்க வைக்கிறீர்கள் - அந்த பள்ளிக்கூடத்திற்கு என்று சில rules and regulations இருக்கும். காலை 8:30 க்கு பள்ளிக்கூடம் என்பார்கள் , மதியம் சாப்பாட்டுக்கு 1:00 மணிக்கு பில் அடிப்போம் என்பார்கள் .. உடனே அது எப்படி எம் புள்ளைக்கு 12:30க்கு எல்லாம் பசிக்கும் , தான் எப்போது சாப்பிடனும் , என்ன சாப்பிடனும் என்பது அவனுடைய உரிமை என்பீர்களா ?  ???????????     அல்லது

இந்த பள்ளியில் உள்ள rules and regulations இது தான் . நம் பிள்ளை படிக்க வேண்டும் என்றால் இதற்க்கு கட்டுப்பட்டு தான் நாம் இருக்க வேண்டும் என்று நினைபீர்களா ? ( எது அறிவுடைமை ? )

இதை அளவுகோலை மனதில் வைத்துக்கொண்டு கீழ் காணும் விசயங்களை படியிங்கள் இன்ஷாஅல்லாஹ் உண்மை விளங்கும்.

இஸ்லாம் என்பது மனிதனின் வாழ்க்கைநெறி பள்ளிக்கூடம் - அந்த பள்ளிகூடத்தில் இணையும்படி இஸ்லாம் உலக மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறது. அந்த அழைப்பை ஏற்பதும் ,மறுப்பதும் அவர் அவர்களின் விருப்பம். (இதில் எந்த நிர்பந்தமும்மில்லை) அந்த அழைப்பை ஏற்பவர்கள் முஸ்லீம்கள்.
மறுப்பவர்கள் இறைமறுப்பாலார்கள்.

அப்படி மனிதனின் வாழ்க்கைநெறி பள்ளிக்கூடத்தை ஏற்பவர்கள் அந்த பள்ளிகூடத்தில் இருக்கும் கட்டளைகளை & வரைமுறைகளை (rules and regulations) கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

அந்த பள்ளிகூடத்தில் இணைவதற்கு அடிப்படையான தகுதி -
ஏக இறைவன் உலகின் அரசன் -அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் .இறைவனின் தூதர் முஹம்மது நபி (ஸல் ) அவர்களை பின்பற்றி நடக்க வேண்டும்.

அந்த பள்ளிகூடத்தின் நடத்துனர் உங்களையும் என்னையும் படைத்த ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனே.

அந்த பள்ளிகூடத்தில் பயில்பவர்களுக்கு வழிகாட்டி (Role Model) முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.

அந்த பள்ளிகூடத்தில் வழங்கப்படும் ஒரே புத்தகம் (Theory) - AL- QURAN -அல் குர்ஆன்

அந்த பள்ளிகூடத்தில் வழங்கப்படும் செயல்முறை விளக்கம் - PRACTICAL -  நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறை மட்டுமே.

அந்த பள்ளிகூடம் (உலக வாழ்வு) தான் நமக்கு வைக்கபடும் பரிச்சை கூடம்.

அந்த பள்ளிக்கூடத்தில் நாம் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் GARDE வாரியாக மறுமையில்( கேள்வி கணக்கு தீர்க்கும் நாளில் ) நாம் தரம் பிரிக்கப்பட்டு  சொர்க்கம்  என்ற முடிவில்லா நல் வாழ்வு நமக்கு வழங்கப்படும்.

இந்த வாழ்க்கைநெறி பள்ளிக்கூடத்தை ஏற்று அதில் இருக்கும் கட்டளைகளை & வரைமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என்றால் அதற்கேர்ப்பார்போல் தண்டிக்கபடுவோம். ஆனால் வாழ்க்கைநெறி பள்ளிக்கூடத்தை ஏற்றதின் காரணமாக அவர்களுக்கு மன்னிப்பு உண்டு.

ஆனால் இஸ்லாம் என்னும் மனிதனின் வாழ்க்கைநெறி பள்ளிக்கூடத்தை முற்றிலும் புறக்கணித்தவர்கள் மிக சுகபோகமாக இவ்வுலகில் வாழ்வார்கள். ஆனால் மறுமையின் இறுதி தீர்ப்பு அவர்களை நிரந்தர நரகத்தில் தள்ளிவிடும். அதிலிருந்து அவர்கள் மீளவே முடியாது.  இதுவே இஸ்லாமிய உலக பள்ளிக்கூடம். 

ஆக பர்தா அணிவதும் அவர்களின் தனிப்பட்ட விருப்ப ,வெறுப்பிற்கு உட்பட்டது தான். இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்ளும் ஒரு முஸ்லீம் பெண்கள் பர்தா என்னும் ஆடையை  அணிய வேண்டும். இல்லை அவர்களுக்கு இஸ்லாத்தை விட அவர்கள் அணிய விரும்பும் ஆடை தான் முக்கியம் என்றால் அவர்கள் இஸ்லாத்திற்கும் , இஸ்லாமியர்களுக்கும் முக்கியமில்லை..



அவர்களின் நன்மைக்காகவே ஆடை - இஸ்லாத்தின் நன்மைக்காக அல்ல..

அல்லாஹ் நம் அனைவரையும் ஒழுக்கமாக வாழசெய்வானாக ...!


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன