Wednesday, December 21, 2011

பிலிப்பின்ஸ் கவர்ச்சி நடிகையின் - ஹஜ் அனுபவங்கள் (!)

இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக..!!

தலைப்பை பார்த்ததும் நீங்கள் சற்று அதிர்ச்சிகலந்த குழப்பத்தில் வந்திருப்பீர்கள்.ஆனால் நடந்த நிகழ்வோ நமக்கு இன்பஅதிர்ச்சியான ஒன்று...

பிலிப்பின்ஸ் நாட்டில் கவர்ச்சி நடிகையாக அறியப்பட்ட Queenie Padilla sa என்ற சகோதரி இஸ்லாம் என்னும் வாழ்க்கை முறையை ஏற்றுகொண்டதுடன்  ஹஜ்கடமையையும் முடித்து வந்துள்ளார் அல்ஹம்துலில்லாஹ் !!

2010ம் ஆண்டு அவர் எப்படி பட்ட நடிகை என்று நீங்கள் அறிய விரும்பினால் ..

இதை பாருங்கள் :




2011ம் ஆண்டு அவர் இஸ்லாத்தை ஏற்று ஹஜ் சென்றுவந்தஉடன் அவர் பேசும் உணர்ச்சிகரமான பேட்டி :

இதை பாருங்கள் இன்ஷாஅல்லாஹ் இது நம் எல்லோருக்கும் சிறந்த படிப்பினை :




ஒரு நடிகையை விட அதுவும் கவர்ச்சி நடிகையை விட சுதந்திரமான ஒருவரை ஒரு பெண்மணியை இஸ்லாத்தையும், பெண்ணடிமை தனத்தையும் பற்றி பீற்றி கொள்பவரால் காட்ட முடியுமா ?  அப்படிபட்ட பெண்மணி இஸ்லாத்தை ஏற்கிறார் ஏன் ? ..

இஸ்லாம் பெண்களை அடிமைபடுத்துகிறது என்றால் இவர் ஏன் இஸ்லாத்தை ஏற்க வேண்டும் ?  ஏன் ஹிஜாப் என்னும் கண்ணியமான உடையணிய வேண்டும் ?

உண்மையில் பெண்களை போகப்பொருளாக , கவர்ச்சியாக பயன்படுத்தும் ஆணாதிக்க சக்திகள் இதற்க்கு பதிலளிக்குமா ?

3 comments:

  1. //இஸ்லாம் பெண்களை அடிமைபடுத்துகிறது என்றால் இவர் ஏன் இஸ்லாத்தை ஏற்க வேண்டும் ? ஏன் ஹிஜாப் என்னும் கண்ணியமான உடையணிய வேண்டும் // அருமையான வரிகள்....தங்கள் கட்டுரை மிகவும் பயனுள்ளதாக உள்ளது..விடாமல் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான கட்டுரை எழுதுங்கள்....ஆனால் இது மட்டும் போதாது முஸ்லிம்களாகிய நமக்குள் புரிதலும்,ஒற்றுமையும் வேண்டும்.ஒருவரின் ஆக்கங்களை இன்னொருவர் ஊக்கப்படுத்த வேண்டும்,அப்பொழுது தான் இஸ்லாத்தை பற்றி பொய் பிரச்சாரம் செய்யும் கள்ளப் பேர்வளிகளுக்கு சரியான பதிலடியை இஸ்லாமிய தளங்கள் தரும்...

    www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி..அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.......

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரே..

    தங்களின் கருத்துக்களுக்கு நன்றி.

    //இது மட்டும் போதாது முஸ்லிம்களாகிய நமக்குள் புரிதலும்,ஒற்றுமையும் வேண்டும்.ஒருவரின் ஆக்கங்களை இன்னொருவர் ஊக்கப்படுத்த வேண்டும்,அப்பொழுது தான் இஸ்லாத்தை பற்றி பொய் பிரச்சாரம் செய்யும் கள்ளப் பேர்வளிகளுக்கு சரியான பதிலடியை இஸ்லாமிய தளங்கள் தரும்... // உங்களின் கருத்துக்களுக்கு முழுமையாக உடன் படுகிறேன். அதுவே எனது எண்ணமும் கூட... நமக்குள் கருத்து வேற்றுமை இருக்கலாம் ஆனால் பொதுவான விஷயத்தின்பால் நாம் ஒன்றிணைய வேண்டும் அது அல்லாஹ் மட்டுமே வணங்க வேண்டும் -நபி (ஸல் ) அவர்களை பின்பற்றி நடக்கவேண்டும். தங்களின் இணையத்தளம் பல ஆக்கபூர்வமான விசயங்களை தாங்கி நிற்கிறது. இன்ஷாஅல்லாஹ் உங்களின் தளத்தில் உடனே இணைகிறேன்.. உங்களின் பணி சிறக்க ஏக இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  3. masha allah " allah is great"

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன