சன் – கலைஞர் – விஐய் டி.வி போன்ற விசப்பாம்புகளே!
காமவெறியைத் தூண்டும் ஆபாசக் குத்தாட்டங்களையும் –விளம்பரங்களையும் உடனே நிறுத்துங்கள்!
காமவெறியைத் தூண்டும் ஆபாசக் குத்தாட்டங்களையும் –விளம்பரங்களையும் உடனே நிறுத்துங்கள்!
உழைக்கும் மக்களே!
இளம் நெஞ்சங்களில் நஞ்சை விதைக்கும் அனைத்து டி.வி களின் ஆபாச வக்கிரங்களையும் ஒழித்துக்கட்டப் போராடுவோம் !
- ‘என் தங்கையின் கற்பையல்லவா காணிக்கையாகக் கேட்டான் அந்தப் பூசாரி’ என்று வீரவசனம் எழுதிய கலைஞர் ‘’மானாட மயிலாட’’ என்ற பெயரில் ஆயிரமாயிரம் தங்கைகளின் மானத்தை விலைபேசி தனது டி.வி யின் மூலம் கல்லா கட்டும் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்துவோம்!
- நண்டு லுங்கிக்கும் ஆக்ஸ் செண்டுக்கும் சோரம்போகும் இழிப்பிறவிகளாக பெண்களை சித்தரிக்கும் வக்கிர விளம்பரங்களை விரட்டியடிப்போம் !
- “ஆயிரங்காலத்து பயிர் திருமணம்‘’ என்ற மக்களின் முதுமொழியை முடமாக்கி அரைக் காசு பெறாத ‘மாசா’ விற்கு திருமணத்தை விலைபேசும் வக்கிர விளம்பரங்களைத் தடுத்து நிறுத்தப் போராடுவோம் !
- ஜுனியர் சூப்பர் சிங்கரில் ‘’அயிட்டம் சாங்கில் பீலிங் பத்தல‘ ’என்று துளிர்களிடம் காம உணர்ச்சியைத் தூண்டும் பணப் பேய்களுக்கு பாடை கட்டுவோம் !
- சரவணனின் ஆணாதிக்க வக்கிரத்தை எதிர்த்துப் போராடும் மீனாட்சியை கர்வம் பிடித்த பெண்ணாக சித்தரித்து பெண்களின் ஜனநாயக உணர்வை மழுங்கடிக்கும் சரவணன் – மீனாட்சி சீரியலை சிறைப்படுத்தப் போராடுவோம் !
- பெண்ணை போகப்பொருளாய் ஆணுக்கு சேவை செய்யும் அடிமையாய் சித்தரிக்கும் விளம்பரங்களை, சீரியலை, சினிமாக்களை ஒழித்துக்கட்ட ஒரணியில் திரள்வோம் !
- பெண்ணின் மேன்மையை சிதைக்கும் பெண்ணின் ஜனநாயக உரிமையை மறுக்கும் பார்ப்பன – சாதி ஆணாதிக்கத்தையும் மறுகாலனியாக்கப் பண்பாட்டையும் பாதுகாக்கும் இந்த போலி ஜனநாயக அரசை மோதி வீழ்த்துவோம்!
புதிய ஜனநாயக அரசை புரட்சியின் மூலம் கட்டியமைப்போம் ! பெண்களின் ஜனநாயக உரிமையை மீட்டெடுப்போம் !
thanks to vinavu.com
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன