இலண்டனில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் முதன்முறையாக சவூதி அரேபிய நாட்டு மகளிர் சிலரும் பங்கேற்கின்றனர். அவர்களுள் ஜூடோ தற்காப்பு விளையாட்டில் (+78 கிலோ பிரிவில்) சவூதி அரேபியா சார்பாக வஜ்தான் அலி சிராஜ் அப்துர்ரஹீம் சஹர்கானி என்கிற சவூதி அரேபியப் பெண்மணி கலந்துகொள்கிறார். சாரா அத்தார் என்னும் இன்னொரு சவூதிப் பெண்மணி பெண்டிருக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்கிறார்.
இந்நிலையில், ஜூடோ போட்டியில் பங்கு பெறுவோர் தலையை மறைக்கக்கூடாது என்று சர்வதேச ஜூடோ குழுமம் உத்தரவிட்டது. சர்வதேச ஜூடோ குழுமத்தின் இந்த விளையாட்டு விதிமுறைக்கு சவூதிஅரேபியா நாடு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
எங்கள் மத அனுஷ்டானத்தின் படி, எங்கள் பெண்கள் தலையை மறைத்துத்தான் போட்டிகளில் பங்கேற்பார்கள் என்று சவூதி அரேபிய பிரதிநிதி தெரிவித்துள்ளார். ஆசிய ஜூடோ கமிட்டி தலையை மறைக்க அனுமதித்துள்ள நிலையில் சர்வதேச கமிட்டி அதற்கு மாறாக வேறுவிதியை வலியுறுத்துவது வியப்பளிக்கிறது. மீறி தலையை மறைக்கக்கூடாது என்று போட்டி அமைப்பாளர்கள் வற்புறுத்தினால், நாங்கள் போட்டியிலிருந்தே விலகுவோம் என்று சவுதி அரேபிய பிரதிநிதி கருத்து அளித்துள்ளார்.
இதனால் போட்டி விதிமுறை மாற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன