Tuesday, January 1, 2013

உடலை மறைத்தால் கண்ணியத்தை பெறுவீர்கள் பெண்களே..!

டெல்லியில் இரவில் தன் நண்பருடன் பேருந்தில் பயணம் செய்த  பாரா மெடிகல் மாணவியை ஆறு பேர் கொண்ட  ரவுடிக் கும்பல் வன்புணர்வு செய்து,  கொடூரமாகத் தாக்கி, ஓடும் பேருந்திலிருந்து வெளியே வீசியதால்  உயிருக்குப் போராடி மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டும் அம்மாணவி  உயிரிழந்த சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்நிலையில் அண்மையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், "கணவரைத் தவிர வேறு ஆண்கள் யாரும் தங்களது அவையங்களைக் கண்டு விடக் கூடாது என்பதற்காக இஸ்லாமியப் பெண்கள் தங்களது உடல் அழகை மறைக்கும் படி பர்தா அணிவது 
இதனாலேயே, உண்மையின் உரைகல்  எனத் தம்பட்டமடிக்கும்  பத்திரிக்கை முதல்  பெரும்பாலான முன்னணி ஊடகங்கள் அனைத்துமே சினிமா நடிகைகளின் அரைகுறை ஆடை படங்களைத் தம் இதழ்களிலும் இணையதளங்களிலும் தனி இடம்கொடுத்தே இடம்பெற வைத்து
வழக்கம்.  இஸ்லாமியப் பெண்களைப் போன்றே  தமிழ்நாட்டுப் பெண்களும், இந்தியப் பெண்களும் கூட பர்தா அணிய வேண்டியது அவசியம். இதன் மூலம் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும். மேலும், பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும்'' என்று தெரிவித்து இருந்தார்.


மதுரை ஆதீனம் சொன்ன கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. மாதர் சங்கங்களும் ஜன நாயக வாலிபர் சங்கங்களும்  போராட்டம் நடத்தக் கூடிய அளவுக்கு மதுரை ஆதீனம் தெரிவித்த கருத்துக்கள் தீண்டத் தகாதவை அல்ல.  பாலியல் குற்றங்களுக்கு,  பெண்கள் அணியும் ஆடை மட்டுமே காரணமல்ல என்ற போதிலும் ஆடையும் ஒரு காரணம் என்ற உண்மையை நாம் ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம்?. ஆண்களின் வக்கிரப் பார்வைகளுக்கு  உடல் அவையங்கள் வெளியே தெரியும் படி அணியும் இறுக்கமான ஆடையும் ஒரு காரணம்தான் என்ற உண்மையை ஏற்க மறுக்கும் நமக்கு அதன் காரணமாகக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களுக்குக் கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று கோருவதற்கு என்ன உரிமை இருக்கிறது?

இன்றும் கூட தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலும் தங்களது உடல்களை
இதனாலேயே, உண்மையின் உரைகல்  எனத் தம்பட்டமடிக்கும்  பத்திரிக்கை முதல்  பெரும்பாலான முன்னணி ஊடகங்கள் அனைத்துமே சினிமா நடிகைகளின் அரைகுறை ஆடை படங்களைத் தம் இதழ்களிலும் இணையதளங்களிலும் தனி இடம்கொடுத்தே இடம்பெற வைத்து
 முழுவதுமாகப் போர்த்திக் கொள்ளும் அளவில் தான் ஆடை அணிகிறார்கள் என்பதையும் ஜெயலலிதா முதன் முறை முதல்வராக இருந்தபோது பர்தா வடிவில் அரை கோட்டு அணிந்திருந்தார் என்பதையும் இங்கே நினைவு கூர வேண்டியுள்ளது. சமூகத்தில் கண்ணியமாக மதிக்கப்படும் கன்னியாஸ்திரிகள், ஏன் அவ்வாறு உடலை மறைத்து ஆடை அணிய வேண்டுமென எவரும் சிந்திப்பதில்லை. இன்று சட்டப் பேரவையில்  காங்கிரஸ் உறுப்பினராக  (எம் எல் ஏ) இருக்கும் விஜயதரணி அவர்கள்,  தம் உடலை மறைக்கும் வண்ணமே ஆடை அணிந்து வருவதையும் மதுரை ஆதீனத்துக்கு எதிராகப் போராடுபவர்கள் தெரிந்து கொள்ளட்டும்.

பெண்களை அரைகுறை ஆடைகளுடன் காட்டும் சினிமாவில், பெண்  கலெக்டர், பெண் நீதிபதி போன்ற பாத்திரங்களில் நடிக்கும் நடிகைகளுக்குக் கண்ணியமான உடையையே அணிவிக்கின்றனர். 

அந்தப் பதவிகளுக்கு உரிய கண்னியம் ஆடைகளில் தெரிய வேண்டும் என்று தெரிந்திருக்கும் சினிமாக் காரர்களின் சினிமாவில், கவர்ச்சி நடிகைகள் டூ பீஸ் ஆடையில் வருவது ஏதோ பட்ஜெட் பற்றாகுறையால் அல்ல. நடிகைகள் டூ பீஸ் ஆடையில் வருவதும், இறுக்கமாகவும் தொடை தெரியும் படியும் ஆடை அணிவதும் படங்களின் வியாபாரத்துக்கே!. ஆண்களின் பாலுணர்ச்சியைத் தூண்டுவதில் ஆடை முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

 இதனாலேயே, உண்மையின் உரைகல்  எனத் தம்பட்டமடிக்கும்  பத்திரிக்கை முதல்  பெரும்பாலான முன்னணி ஊடகங்கள் அனைத்துமே சினிமா நடிகைகளின் அரைகுறை ஆடை படங்களைத் தம் இதழ்களிலும் இணையதளங்களிலும் தனி இடம்கொடுத்தே இடம்பெற வைத்து "சதை வியாபாரம்" செய்யும் ஊடக பிம்ப்களாக உள்ளனர் என்பதை மறக்கக்கூடாது!

அவ்வளவு ஏன், மதுரை ஆதீனம் தமது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று போராட்டம் நடத்தும் மாதர் சங்கங்களே பல முறை நடிகைகளின் கவர்ச்சிப் படங்களின் போஸ்டர்களைக் கிழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதனாலேயே, உண்மையின் உரைகல்  எனத் தம்பட்டமடிக்கும்  பத்திரிக்கை முதல்  பெரும்பாலான முன்னணி ஊடகங்கள் அனைத்துமே சினிமா நடிகைகளின் அரைகுறை ஆடை படங்களைத் தம் இதழ்களிலும் இணையதளங்களிலும் தனி இடம்கொடுத்தே இடம்பெற வைத்து


அண்மையில் கூட நீது சந்திரா என்ற நடிகைக்கு எதிராகக் கேரளத்தில் போராட்டம் நடைபெற்றது. சினிமா போஸ்டர்கள் ஆண்களின் ஆவலைத் தூண்டினால், நேரில் காணும் கவர்ச்சி அவனது பாலுணர்ச்சியையே தூண்டும் என்பது இந்த மாதர்களுக்குப் புரியாமல் போனது ஏனோ?

தமிழர்களின் கலாச்சாரத்துக்கு வேட்டு வைக்கும் வகையில் கருத்துத் தெரிவித்து இருந்த நடிகர் கமலுக்கு எதிராக இது வரை எந்த மாதர் சங்கங்களும் அணி திரள வில்லை. லிவிங் டுகெதர் என்ற விபச்சாரத்தின் நவீன கண்டுபிடிப்புக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்து இருந்த நடிகர் கமலின் பேச்சுக்குக் குறைந்தபட்சம் கண்டனம்கூடத் தெரிவிக்க இயலாத நாம், மதுரை ஆதீனத்துக்கு எதிராக அணி திரளுகிறோம். 

உண்மை என்று தெரிந்தும்கூட அதை ஏற்க மறுப்பது, சொன்னவர் மதுரை ஆதீனம் என்பதாலா அல்லது பாலியல் வழக்குகளில் சிக்கிய நித்யானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்த அருணகிரி நாதருக்கு பெண்களின் ஆடையைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது என்ற அர்த்தத்திலா என்பது விளங்க வில்லை.

ஏதோ ஒரு வகையில் குற்றச் செயலுக்கு அடிப்படையாக விளங்கும் ஆடை விஷயத்தில் பெண்கள் இனியாவது கவனமாக இருப்பது நல்லது. இல்லையேல் பெண்கள் உடல் ரீதியாக வன்புணரப்படா விட்டாலும் ஆண்களின் காமப் பார்வை எனும் வன்புணர்வுக்குத் தப்ப முடியாது என்பது மட்டும் நிதர்சனமான உண்மையாக இருந்து கொண்டிருக்கும்!

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன