மனிதன் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் சரியான தீர்வைச் சொல்லும் மார்க்கம் இஸ்லாம் மட்டுமே! காரணம், இது இறைவனுடைய மர்க்கம்.மனிதனுடைய வாழ்வில் என்னென்ன பிரச்சனைகள் வரும்; அந்தப் பிரச்சனைகளுக்கு என்னென்ன தீர்வு என்பது படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரியும்.
அதனால் தான் அனைத்தையும் அறிந்த இறைவனின் சட்டதிட்டங்கள், அனைத்துப் பிரச்சனைகளுக்கும் சரியான தீர்வாக அமைந்திருப்பதை நாம் அனுபவப்பூர்வமாகக் கண்டு வருகின்றோம்.
அதனால் தான் அனைத்தையும் அறிந்த இறைவனின் சட்டதிட்டங்கள், அனைத்துப் பிரச்சனைகளுக்கும் சரியான தீர்வாக அமைந்திருப்பதை நாம் அனுபவப்பூர்வமாகக் கண்டு வருகின்றோம்.
வல்ல இறைவன் மனித குலத்திற்கு வழங்கியுள்ள வழிகாட்டுதல்களில் முக்கியமான சட்டதிட்டங்களில் ஒன்றுதான் தலாக் – என்னும் விவகாரத்துச் சட்டம். இஸ்லாம் வழங்கியுள்ள இந்த தலாக் சட்டத்தைத் தான், இஸ்லாத்தின் எதிரிகள் பலரும் விமர்சனம் செய்து வந்தார்கள். இவர்கள் எதெற்கெடுத்தாலும் தலாக் – தலாக் – தலாக் என்று கூறி விவாகரத்து செய்து விடுகின்றார்கள். இது சரியில்லை என்பதுதான் அவர்களுடைய பிரதான குற்றச்சாட்டு.
ஆனால். இப்படி இலகுவான முறையில் தலாக் கூறிப் பிரிவது என்பது ஏதோ பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்பது போன்றும், இதனால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்; இஸ்லாம் இவ்வாறாக பெண்களுக்கு அநீதி இழைக்கின்றது என்றும் கூக்குரல் போட்டனர். யார் இவ்வாறெல்லாம் கூக்குரல் போட்டார்களோ அவர்களையே அவர்களது வாயலேயே, விவாகரத்துச் செய்யும் வழிமுறையில் இஸ்லாம் கூறும் வழிமுறைதான் சரியானது என்று வல்ல இறைவன் சொல்ல வைத்துள்ளான்.
கடந்த வாரம் மத்திய அரசாங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது :
பிரிந்த தம்பதியர் விரைவில் விவாகரத்து பெறும் வகையில், புதிய சட்ட மசோதா கொண்டு வரப்படுகிறது. இதற்கு, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல்அளித்துள்ளது.
திருமணச் சட்டத்திருத்த மசோதா, கடந்த 2010ல், ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், இந்த மசோதா சட்டம் மற்றும் நீதித்துறைக்கானபார்லிமென்ட் நிலைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. இதைப் பரிசீலித்த நிலைக் குழு, இந்த மசோதாவில் நான்கு திருத்தங்களைச் செய்யும்படிபரிந்துரை செய்துள்ளது. இதற்கு ஏற்ப, மசோதாவை மாற்றி அமைக்க, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, பிரிந்த தம்பதியர்விரைவில் விவாகரத்து பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது, பிரிந்த தம்பதியர் பரஸ்பரம் விவாகரத்து கோரி விண்ணப்பித்தால், குறைந்தபட்சம் ஆறுமாதம் முதல் 18 மாதங்கள் வரை, அவர்கள் விவாகரத்து பெற காத்திருக்க வேண்டும்.
இனி அந்த நிலைமை இருக்காது. "
இனி சேர்ந்து வாழவே முடியாத திருமணம்' என்ற புதிய விதிமுறை, சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதால், பிரிந்தவர்கள் விரைவில் விவாகரத்து பெற்று விடமுடியும். அவர்கள் இனி ஒன்று சேர முடியாது என, கோர்ட் தீர்மானித்தால், உடனடியாக விவாகரத்து வழங்கலாம். இதன் மூலம், ஆறு மாதம் முதல் 18 மாதம்வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது.
பரஸ்பரம் விவாகரத்து கோரி விண்ணப்பித்தால், உடனே கிடைக்கும். இதே போல, "சேரவே முடியாது' என்றபுதிய பிரிவின்படி, கணவன் விவாகரத்து கேட்டால், அதை எதிர்க்க, மனைவிக்கு உரிமை உண்டு. ஆனால், மனைவி இதே காரணத்திற்காக விவாகரத்து கோரும்போது, அதை எதிர்க்க கணவனுக்கு உரிமை இல்லை. மேற்கண்டவாறு மத்திய அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, மிக இலகுவான முறையில் விவகாரத்துப் பெறுவதற்காக இஸ்லாம் ஏற்படுத்தியுள்ள வழிமுறைகளை விமர்சனம் செய்தவர்கள், தற்போது இந்திய அரசாங்கம் வகுத்து வைத்துள்ள விவாகரத்துப் பெறும் நடைமுறைகளில் ஏற்படும் பின்னடைவுகளையும், பிரச்சனைகளையும் கண்கூடாகக் கண்டுவிட்டு இத்தகைய புதிய மசோதாவை உருவாக்கியுள்ளார்கள் என்றால் இவர்களது இந்த மசோதா, இஸ்லாம் கூறும் வழிகாட்டுதல்கள் தான் மனிதனது பிரச்சனைகளுக்கு சரியான வழியைக் காட்டக்கூடியதாக அமைந்துள்ளன என்பதற்கு சான்று பகரக்கூடியதாக அமைந்துள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல.
தற்போது நடைமுறையில் ஒருவர் விவாகரத்து பெற விரும்பினால் அவர் 6 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும் என்ற நடைமுறையுள்ளது என்று அரசு கூறுவது சரிஅல்ல அதைவிட அதிகமான மாதங்கள் வருடங்கள் கூட காத்திருக்கும் நிலைதான் நடைமுறையில் உள்ளது. இப்படி ஒருவன் விவாகரத்துச் செய்ய விரும்பும் போது பல மாதங்கள் அல்லது பல வருடங்கள் அவன் தனது இந்தப் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு தெரியாமல் இருந்தால், இதனால் ஏற்படும் விபரீதங்கள் என்னென்ன? இதனால் ஒரு பெண் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகின்றால் என்பதை நாம் ஏற்கனவே பல நிகழ்வுகளில் தெளிவுபடுத்தியுள்ளோம்
சின்ன வீட்டை செட்டப் செய்ய தூண்டும் விவாகரத்து முறை :
மனைவியைப் பிடிக்காத நிலையில் 'விவாகரத்துப் பெறுவதற்காகக் காலத்தையும், நேரத்தையும், பொருளாதாரத்தையும் ஏன் வீணாக்க வேண்டும்' என்றுஎண்ணுகின்ற ஒருவன், அவனுக்குப் பிடித்தமான மற்றொருத்தியைச் சின்ன வீடாக அமைத்துக் கொள்கிறான். கட்டிய மனைவியுடன் இல்வாழ்வைத்தொடர்வதுமில்லை. அவளைப் பராமரிப்பதுமில்லை. இவன் மாத்திரம் தகாத வழியில் தன் உணர்வுகளுக்குத் தீனி போட்டுக் கொள்கிறான்.
இவள் பெயரளவுக்கு மனைவி என்று இருக்கலாமே தவிர, பிடிக்காத கணவனிடமிருந்து இல்லற சுகம் அவளுக்குக் கிடைக்காது. வாழ்க்கைச் செலவினங்களும்கூட மறுக்கப்படும். இவை மிகையான கற்பனை இல்லை. நாட்டிலே நடக்கும் உண்மை நிகழ்ச்சிகள் தாம். மனைவி என்ற உரிமையோடு இதைத் தட்டிக்கேட்டால் அடி உதைகள்! இத்தகைய அபலைகள் ஏராளம்!
பெயரளவுக்கு மனைவி என்று இருந்து கொண்டு அவளது உணர்வுக்கும், தன்மானத்துக்கும், பெண்மைக்கும் சவால் விடக் கூடிய வறட்டு வாழ்க்கை வாழதள்ளப்படுவதன் மூலம் பெண்கள் சித்திரவைதைக்கு உள்ளாகின்றார்கள்.
எளிதாக விவாகரத்துப் பெறும் முறை இருந்தால் இந்தக் கொடூர எண்ணம் கொண்ட ஆண் அவளை விடுவித்து விடுவான். அவளுக்கும் நிம்மதி; அவள் விரும்பும்மறு வாழ்வையும் தேடிக் கொள்ளலாம்.
இப்படி அழகான வழியில் பிரச்சனையை தீர்ப்பதை விட்டுவிட்டு பலவருடங்கள் நீதிமன்றத்திற்கு நாம்அலைவானேன்? நல்ல(?) சின்ன வீடு ஒன்றை செட்டப் செய்து கொண்டால் தொல்லை ஒழிந்தது என்ற முடிவை சில கேடுகெட்டவர்கள் எடுக்க இந்தவிவாகரத்து இழுத்தடிப்பு முறை தான் காரணம் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா?
அபலைகள் மீது அவதூறு சொல்லவைக்கும் அற்புதச்(?)சட்டம் :
விவாகரத்துப் பெறுவதற்காக நீதிமன்றத்தை அவன் அணுகுகிறான். எந்த மாதிரியான காரணம் கூறினால் விரைந்து விவாகரத்து கிடைக்குமோ அது போன்றகாரணத்தைப் பொய்யாகப் புனைந்து கூறத் துணிகிறான். தன் மனைவி நடத்தை கெட்டவள் என்று நா கூசாமல் கூறுகின்றான்.
இதற்கான பொய்யானசாட்சிகளையும், சான்றுகளையும் தயார் செய்கின்றான்.
அவனுக்குப் பிடிக்கவில்லை என்ற நிலையில் விவாகரத்தையும் அவன் பெற்று விடுவதோடு, அவளது கற்புக்குக் களங்கம் ஏற்பட்டு, அவளுக்கு தலைக்குனிவும்ஏற்படுவதற்கும், அபலைகள் மீது அவதூறுகளை செட்டப் செய்து சொல்ல வைப்பதற்கும் தற்போதுள்ள இழுத்தடிப்பு விவாகரத்து நடைமுறை தானே காரணம்.
இளம் பெண்களுக்கு மட்டும் ஸ்டவ் வெடிக்க காரணம் என்ன? :
நீதிமன்றம் முடிவு செய்யும் வரை காத்திருக்கப் பொறுமை இல்லாதவன், அதற்காகப் பணத்தைச் செலவு செய்ய விரும்பாதவன், மற்றொரு வழியைத்தேர்ந்தெடுக்கிறான். இது முந்தைய இரண்டு வழிகளை விட மிகவும் கொடுமையானது கொடூரமானது!
பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தி விட்டு சமையல் செய்யும் போது ஏற்பட்ட விபத்து என்று நாடகமாடுகின்றான். இப்படிச் சாவூருக்கு அனுப்பப்பட்ட அபலைகளின்எண்ணிக்கை கணக்கில் அடங்காது. ஸ்டவ் வெடித்து இளம் பெண் சாவு என்று செய்திகள் இடம் பெறாத நாளிதழ் இல்லை. தினமும் பல நூறு சம்பவங்கள்! அதுஏன் இளம்பெண்கள் மட்டும் பற்ற வைக்கும் ஸ்டவ்கள் மட்டும் வெடிக்கின்றன. கிழவிகள் ஸ்டவ்களை பற்ற வைத்தால் அவை வெடிக்காதா? ஏன் இளம் பெண்கள் பற்ற வைக்கும் ஸ்டவ்கள் மட்டும் வெடிக்கின்றன என்று இப்poழுது புரிகின்றதா? .
கணவனும், மனைவியும் தனித்திருப்பதை உலகம் அனுமதிப்பதால் அந்தத் தனிமையில் அவளை எது வேண்டுமானாலும் அவனால் செய்து விட முடியும். இதுபோன்ற கொடூரக் கொலைகளை நிரூபிக்கவும் முடியாமல் போய் விடுகின்றது. இந்தக் கொடுமைக்குகளுக்கும் தற்போதுள்ள விவாகரத்து நடைமுறைகள் தான்காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியுமா?
இப்படி நடக்கக்கூடிய பிரச்சனைகளை ஆய்வு செய்துவிட்டுத்தான், இவ்வளவு பிரச்சனைகளுக்கும் மூலக்காரணமாக அமைந்திருப்பது நம் நாட்டிலுள்ள“விவாகரத்து சட்ட முறை” மிக்க் கடினமாக இருப்பதுதான் என்பதை உணர்ந்து தான் இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. இப்போதாவது இந்த முடிவை மத்திய அரசு எடுத்திருப்பது உண்மையிலேயே பாராட்டத்தக்க ஒரு விஷயம்.
இத்தகைய கொடூரங்களும், சித்திரவதைகளும் நடந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் ஆண்களின் கொடூரத்தை உணர்ந்த இஸ்லாம், பெண்களின் உயிரும்,உடமையும், மானமும், மரியாதையும் காக்கப்பட வேண்டுமென்று கருதி 'உனக்குப் பிடிக்காவிட்டால் அவளைக் கொன்று விடாதே! அவளது இல்லறசுகத்துக்குத் தடையாக இராதே! பிரச்சனை ஏதுமின்றி விவாக ஒப்பந்தத்தை ரத்து செய்து கொள்!' என்று இலகுவான முறையில் விவாகரத்து முறையைஅனுமதிக்கின்றது.
இதனால் தான் முஸ்லிம் பெண்கள் எவரும் ஸ்டவ் வெடித்துச் சாவதில்லை. எந்தச் சமுதாயத்தில் தலாக் அனுமதிக்கப்படவில்லையோ, அல்லது கடுமையானநிபந்தனைகளுடன் அனுமதிக்கப்படுகின்றதோ அந்தச் சமுதாயப் பெண்களை மாத்திரம் தேர்ந்தெடுத்து ஸ்டவ் வெடிக்கிறது.
இவர்கள் முட்டிவிட்டு குனிந்துள்ளனர்; இவர்கள் முட்டிவிட்டு குனிவதைக் காட்டிலும், முட்டுவதற்கு முன்பே குனிந்து கொள்ளுங்கள் என்று இஸ்லாம்வழிகாட்டுகின்றது.
இந்த மசோதாவை மத்திய அரசு நடைமுறைப்படுத்தினால், சின்னவீடு செட்டப் செய்யும் நடைமுறைகள் தானாக குறைந்து விடும்;இளம்பெண்களை மட்டும் குறிவைத்து வெடிக்கும் ஸ்டவ் அடுப்புகள் தானாக அமர்ந்து விடும்; அபலைகள் மீது கணவன்மார்கள் சொல்லும் அவதூறுகளும்அகன்று விடும். இப்போதுதான் இஸ்லாம் காட்டும் வழிமுறைகளை நோக்கி இந்த விஷயத்தில் அடியெடுத்து வைக்க ஆரம்பித்துள்ளது மத்திய அரசு!
இது குறித்த பிரச்சனைகளுக்குத் தீர்வு என்ன என்பதை பல வழிகளில் ஆய்வு செய்துவிட்டு இஸ்லாம் கூறக்கூடிய சட்டம் தான் மனித வாழ்வுக்கு உகந்ததுஎன்றும், திருக்குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் காட்டித்தந்த வழிமுறைகளைத்தான் மத்திய அரசு இந்த விஷயத்தில் அச்சரம் பிசகாமல் அப்படியேகாப்பியடித்துள்ளது என்பதற்கு இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ள மற்றொரு அம்சமும் சான்று பகருகின்றது.
"சேரவே முடியாது' என்ற புதிய பிரிவின்படி, கணவன் விவாகரத்து கேட்டால், அதை எதிர்க்க, மனைவிக்கு உரிமை உண்டு. ஆனால், மனைவி இதேகாரணத்திற்காக விவாகரத்து கோரும் போது, அதை எதிர்க்க கணவனுக்கு உரிமை இல்லை என்ற சட்டம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த அதேவழிமுறையை அப்படியே பின்பற்றி இயற்றப்பட்டுள்ளது.
பெண்கள் தங்களது கணவனைப் பிடிக்கவில்லை என்று விவாகரத்து கோரினால் அந்தப் பெண்ணிடத்தில் காரணம் கேட்கத் தேவையில்லை என்பதும், கணவன்அவளோடு சேர்ந்து வாழ விரும்பினால் கூட பெண்களுக்கு அவர்களுக்கு விவாகரத்து உரிமையை வழங்கிவிட வேண்டும் என்றும் இஸ்லாம் சொல்லும்தீர்வுதான் இதிலும் சரியானது என்பதை இந்தச் சட்ட்த்திருத்தம் நிரூபிக்கின்றது.
கூடிய விரைவில் இஸ்லாம் காட்டும் வழிகாட்டுதல்கள் தான் அனைத்து விஷயங்களிலும் சரியானது என்பதை உணர்ந்து மக்களும் ஆட்சியாளர்களும்இஸ்லாத்தை நோக்கித் திரும்பு காலம் வெகு தூரத்தில் இல்லை.
இவர் அல்லாஹ்வின் தூதராவார். தூய்மையான ஏடுகளை ஓதுகிறார். அதில் நேரான சட்டங்கள் உள்ளன.
அல்குர்-ஆன் 98 : 2,3
onlinepj.com
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன