Tuesday, August 14, 2012

பெருகி வரும் கற்பழிப்புக்கு யார் காரணம்? முற்போக்கு பெண்கள் வாக்குமூலம்



பெண்கள் அன்னிய ஆண்களைக் கவரும் வகையில் ஆடை அணியக் கூடாது என்று இஸ்லாம் வழி காட்டுகிறது. ஆண்களும் தமது கற்பைப் பேணிக்கொள்ளுமாறு கட்டளை பிறப்பிக்கிறது.

30. (முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

31. தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.
திருக்குர் ஆன் 24:30,31

பெண்ணுரிமையைத் தவறாகப் புரிந்து கொண்டிருந்த் மேகத்த்திய பெண்கள் இஸ்லாம் கூறும் இந்த உண்மையை உணர ஆரம்பித்துள்ளனர்.

இன்று 21-02-2010 தினமலர் நாளேட்டில் வெளியான செய்தியைப் பாருங்கள்

லண்டன் :கற்பழிப்பு சம்பவம் நடப்பதற்கு பெண்களே காரணம், என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

லண்டனில் சமீபத்தில் கற்பழிப்பு குற்றம் குறித்து ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆயிரம் பேரிடம் இது குறித்து கருத்து கேட்கப்பட்டது. 18 வயது முதல் 24 வயதுக்குட்பட்ட பெண்கள் தான் அதிக அளவில் கற்பழிக்கப்படுகின்றனர். இந்த சம்பவம் நடப்பதற்கு பெரும்பாலும் பெண்களே காரணமாக உள்ளனர் என பெரும்பாலோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இளம் பெண்கள் குட்டை பாவடை போன்ற தொடை தெரியும் அளவுக்கு கவர்ச்சிகரமாக உடை அணிவதும், ஆண் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவதும் இவர்களே வம்பை விலைக்கு வாங்குவதாக உள்ளது. இன்னும் சிலர், ஆண் நண்பர்களின் வீட்டில் தங்குவதும், விருந்து நிகழ்ச்சிகளில் மேலாடை விலகுவது கூட தெரியாமல் நடனமாடுவதும் ஆண்களை சபலத்துக்குள்ளாகி விடுகிறது.

இதனால், தான் கற்பழிப்பு குற்றங்கள் நடக்கின்றன. கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபடும் மூன்றில் ஒரு ஆண், தான் கற்பழித்ததை ஒப்பு கொள்வதில்லை. இதே போல கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட 50 சதவீதத்துக்கும் அதிகமான பெண்கள் இந்த சம்பவத்தை போலீசில் சொல்ல முன்வருவதில்லை. இந்த விஷயம் கோர்ட் வரை செல்வதற்கு தயங்குகின்றனர். 42 சதவீத பெண்கள் மட்டுமே கற்பழிக்கப்பட்டதை போலீசில் புகார் செய்கின்றனர். இவ்வாறு கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

    

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன