Friday, August 3, 2012

அரைகுறை ஆடைகளே பாலியல் ‎வன்முறைக்கு காரணம் : ஸ்ரீலங்கா அமைச்சர்கள்


அரைகுறை ஆடைகளே பாலியல் வன்முறைக்கு
அரைகுறை ஆடைகளை அணியும்பெண்களே பாலியல் வன்முறைக்கு காரணம் :‎ உண்மையை உடைத்துப் பேசிய ஸ்ரீலங்கா அமைச்சர்கள்!‎

வீராஜபக்சேவின் அமைச்சரவையில் மக்கள் தொடர்புத்துறை அமைச்சராக உள்ளவர் மேர்வின் சில்வா. சமீபகாலமாக பெண்களுக்கஎதிரான பாலியல் சேட்டைகள் இலங்கையில் அதிகமாக நடப்பதால் கடுமையான சட்டங்களைக் கொண்டு வரவேண்டும் என்று அங்கு பரவலாக குரல் ஒலித்து வருகின்றது. ‎அதற்கென்று தனிச்சட்டங்கள் கொண்டுவருவதற்கான மசோதாக்கள் எல்லாம் வர உள்ளது.‎

இந்நிலையில், “எங்களது நாட்டு பெண்களப் பாருங்கள். ஒன்று கைகள் இல்லாத அல்லது மிகவும் குட்டையான ஆடைகளை அணிகின்றனர். ‎அரைகுறை ஆடைகளை அணியும் பெண்களே பாலியல் வன்முறைச் சம்பவங்களுக்குக் காரணம் எனத் தெரிவித்துள்ளார்அமைச்சர் மேர்வின் சில்வா .‎

தெரியாதவற்றை ஆண்களுக்குக் காட்டும் வகையில் பெண்கள் ஆடை அணிகின்றார்கள். பௌத்தன் என்ற வகையில் கைகளை அசைக்கும் போது செல்வோம். விருப்பம் இல்லையென்று சொன்னால் பலவந்தமாக பெற்றுக் கொள்ள முயற்சிப்போம். இவ்வாறு முயற்சி செய்தால் அதனை பாலியல் பலத்காரம் எனச் சொல்கின்றார்கள். யார் இதற்குக் காரணம்? அநாகரீகமாக ஆடைகளை அணியும் பெண்களே இதற்குக் காரணம்என அமைச்சர் மேர்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.‎

மட்டக்களப்பு ரிதீ தென்ன பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.‎

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “எங்களது பெண்களைப் பாருங்கள். ‎ஒன்று கைகள் இல்லாத அல்லது மிகவும் குட்டையான ஆடைகளை அணிகின்றனர். அரைகுறை ஆடைகளை அணியும் பெண்களே பாலியல் வன்முறைச் சம்பவங்களுக்குக் காரணம்" எனத் தெரிவித்துள்ளார்.‎

"
முஸ்லிம் பெண்களைப் பாருங்கள் உடல் முழுவதையும் மூடியுள்ளனர். ‎தலையும் மூடப்பட்டுள்ளது. சில இஸ்லாமியப் பெண்கள் தங்களது முகத்தையும் மூடிக் கொள்கின்றனர். இவ்வாறு தமது கலாச்சாரத்தைப் பேணும் பெண்கள், ஆண்களைத் தூண்டுவதில்லைஎன்றும் அவர் கூறியுள்ளார்.‎

இஸ்லாமியப் பெண்கள் தங்களது உடலை மறைக்கக்கூடிய வகையில் உடையணிவது அவர்களையும், அவர்களது கற்பையும் கயவர்களிடத்திலிருந்து காக்கும் கேடயமாக அமைந்துள்ளது என்பதை இந்த உலகம் இப்போதுதான் அறியத் துவங்கியுள்ளது.‎

இதேபோல சென்ற வாரம் மத்தியப் பிரதேச அமைச்சர் விஜய் வர்கியாவும் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.‎

அதே போன்று இலங்கையின் மற்றொரு அமைச்சரும், பௌத்த மதத்தைச் சார்ந்தவருமான விமல் வீரவன்ஸாவும் இஸ்லாத்தின் சட்ட திட்டங்கள் இலங்கையில் அமுல்படுத்தப்படுவது அவசியமானது என்று தெரிவித்துள்ளார்.‎

இஸ்லாமிய ஷரீஅத்தின் சட்டங்களையோ, சவூதி அரேபியா போன்ற நாடுகளின் சட்டங்களையோ இலங்கையில் அமல்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து அவர் அழுத்தந் திருத்தமாக கருத்துத் தெரிவித்துள்ளார்.‎

பாலியல் கொடுமைகள், குற்றச் செயல்கள், அதிகரித்துவரும் போதைப் பொருள் உபயோகம் ஆகியவற்றிற்கு எதிராகப் போராட இத்தகைய சட்டங்கள் முககியமானது என்று வீரவன்ஸா கூறினார்.‎

குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்துவோரை சட்டத்தில் திருத்தம் செய்து குறைந்தது மரண தண்டனையாவது அளிக்கவேண்டும் என்று வீரவன்ஸா கூறினார்.‎

இப்படி புத்த மதத்தைச் சார்ந்த அமைச்சர்களெல்லாம் மரண தண்டனையைக் கொண்டு வரச் சொல்லி கருத்து தெரிவிக்கும் இவ்வேளையில் இங்குள்ள சட்டமன்ற ஜனாஸா மரணதண்டனையை ஒழிக்க வேண்டும் என்று குரல் கொடுப்பது கேவலத்திலும் கேவலமாக உள்ளது.‎

ஒருபக்கம் இலங்கையில் உள்ள அமைச்சர்கள் எல்லாம் நல்லொழுக்கத்தை போதித்து, அதற்கு தகுந்தாற்போல சட்டதிட்டங்களை மாற்ற வேண்டும் என்று பேசிக்கொண்டு, மறுபுறம் இலங்கை பாராளுமன்றத்தினுள் குட்டைப்பாவடையின் மகிமைகளைப் பற்றிப் பேசி அதுதான் அழகு என்று வர்ணிக்கும் கேவலமான செயல்களையும் செய்து வருவது வருந்தத்தக்க ஒரு விஷயம். சம்பந்தப்பட்டவர்கள் சிந்திப்பார்களா?

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், ‎‎(ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) ‎அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.'' அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.‎
அல்குர்-ஆன் 33 : 59
 
02.08.2012. 13:28

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன