Monday, January 16, 2012

இன்றைய பள்ளி மாணவ-மாணவிகளின் நட்பு இது தான் ..!







இதற்க்கு யார் காரணம் ..? இதுபோன்று என்றைக்காவது நடக்காமல் இருந்தால் தான் அரிது என்று சொல்லும் அளவிற்கு நாட்டு நடப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இதற்க்கு இது மட்டுமே காரணம் என்று ஒற்றை வார்த்தையில் இதற்க்கு தீர்வு சொல்லமுடியாது.

1.சமூக சூழ்நிலை -சினிமா - செல்போன் - இன்டர்நெட்
2.ஆண் பெண் எல்லையற்ற பரஸ்பரம்.
3.பெற்றோர்களின் கண்காணிப்பு இல்லாதது.
----
பள்ளி படிக்கும் போதே இந்த பள்ளி மாணவ - மாணவிகளுக்கு ஏன் இந்த எண்ணம் ...? இந்த எண்ணம் வருவதற்கு முதல் காரணம் சினிமா கலாச்சாரம்..

நடிகையும் ,நடிகனும் கட்டிபுரண்டாலும் கண்சிமிட்டாமல் குடும்பத்தோடு உட்காந்து பார்க்க வைப்பதில் ஹிமாலய வெற்றி பெற்று விட்டது சினிமா.

இதிலிருந்து இது அசிங்கமில்லை , ஆபாசமில்லை , தவறில்லை என்ற எண்ணம் சாதாரணமாக நமக்கு வந்துவிடுகிறது.இயல்பாக வரும் வெட்க்க உணர்வும் இங்கே மரத்து அல்லது மறந்து போகிறது.

----
ஆண் -பெண் கூட்டு கல்வி முறை ... ஆணுக்கும் பெண்ணுக்கும் வெறு வெறு உடைகளை உடுத்த சொன்ன நமக்கு...  ஆணுக்கும் ,பெண்ணுக்கும் வெறு வெறு கல்விக்கூடங்களை நம்மால் ஏற்படுத்த முடியவில்லை.

மாணவிகள் தன் கூட படிக்கும் சக மாணவர்கள் மூலமாக , ஆசிரியர்கள் மூலமாக கற்பழிக்க படுகிறார்கள் ,கடததப்படுகிரார்கள், அசிங்கபடுத்தபடுகிறார்கள் என்று தனி தனி  கல்விக்கூடங்கள் நடத்த சொல்கிறோம் ஆனால் இதெல்லாம் ஒன்றும் விளங்காதவர்கள் போல் ஆண்களும்,பெண்களும் சரி சமம் அது எப்படி என்கிறார்கள் அறிவு ஜீவிகள்.

என்ன மண்ணாங்கட்டி சரி சமம் ????

உடுத்துற உடையிலிருந்து , காலில் போடுற செருப்பு வரைக்கும் வேற்றுமை.
அதில் மட்டுமா ?

கிரிக்கெட் , புட்பால் ,டென்னிஸ் விளையாட்டில் ஏன் ஆண்களும் ,பெண்களும் கலந்து விளையாட கூடாது ?

டென்னிசில் ஏன் கலப்பு இரட்டையர் விளையாட்டு - ஒரு ஆணும் ,பெண்ணும் நேரடியாக மோத விடலாமே ?

ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணியுடன் - இந்திய ஆண்கள் கிரிகெட் அணி விளையாடுமா ? ஏன் சரி சமம் தானே ? ஏன் பெண் உரிமைக்காக போராடும் ? அமைப்புகள் இதற்கு கொடிபிடிக்க வில்லை ?

உண்மையில் உலகம் முழுவதும் ஆணாதிக்க சக்திகளின் கூட்டுமுயற்சியில் நடக்கிறது இதெல்லாம். பெண்களை போகப்பொருளாக சித்தரிப்பதே இவர்களின் வேலை.


மேலே நடந்த சம்பங்களை வீடியோவில் பார்த்தீர்கள்.

அதில் அந்த பள்ளி மாணவியிடம் தவறாக நடந்து ,அதை வீடியோ எடுத்து பரப்பிய மாணவர்களை பற்றி ஏதும் செய்திகள் வந்ததா ?

அவர்களுக்கு வேறு பள்ளியில் சேர்வதற்கு மாற்று சான்றிதழ் தான் கொடுக்க முடிந்தது நம்மால் .. ஏன் அவர்கள் தண்டிக்க படவில்லை ஆணும ,பெண்ணும் சமம் அல்லவா ? .. எல்லா நிலைகளிலும் பெண்கள் தான் முதலில் பாதிக்கபடுகிறாள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

முதலில் போலியாக பெண் சுதந்திரம் பேசுபவர்கள் பெண்கள் பெண்களாக மதிக்க தெரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் வீட்டில் ஒரு விலைமதிப்பில்லாத ஒரு பொருள் இருந்தால் என்ன செய்வீர்கள் அதை எப்படியெல்லாம் பாதுகாக்க முடியுமோ அப்படி பாதுகாப்பீர்கள் ஏன் ? 

ஏனெனில் நீங்கள் அந்த பொருளில் தன்மையை ,அதன் முக்கியததுவத்தை அறிந்து வைத்துள்ளீர்கள். அதை போல ஒரு பெண்ணை அந்த பெண்ணிற்குள் இருக்கும் பெண்ணியத்தை , அதன் பெருமையை ,மான மரியாதையை நீங்கள் அறிந்துதிருந்தால் இப்படி செய்வீர்களா ?

பல பெண்களுக்கே இதெல்லாம் விளங்குவதில்லை மதிமயக்கதில் இருக்கிறார்கள். ஆக பெண்களின் உடல்கூறுகளின் தன்மைகளை அறிந்து பெண்கள் வழிநடத்த படவேண்டும் .. ஆபாசங்களின் மொத்த உருவமாக இருக்கும் சினிமாவை தவிற்காதவரை.. இதுபோன்ற சம்பவங்களை முழுமையாக களைய முடியாது.
   

2 comments:

  1. இன்றைய பள்ளி மாணவ-மாணவிகளின் நட்பு இது தான் என்று பொத்தாம் பொதுவாக அபாண்டத்தை கூறி கொச்சை படுத்துவதை வன்மையாக கண்டிக்கிறேன் , லச்சகனகான பேர் படிக்கின்றனர் அனைவரும் ஒரைமாதுரி இல்லை, ஏதாவது ஒரு லூசு லூசுத்தனமாக செய்தால் உடனே அனைவரும் இப்படிதான் என்று சொள்ளகுடாது
    நானும் பலவருடங்களாக உம்மை பார்த்து கொண்டுதான் இருக்கிறேன் , நீர் தொடர்ந்து இதுபோலவே பேசி கொண்டு இருகிர், இதுதவறு நிறுத்திகொள்ளும், நீர் ஒரு வீண் சந்தேக புத்தி உள்ளவர் பொல தெரிகிரர்த்து

    ReplyDelete
  2. சகோதரர் ABC அவர்களுக்கு ,

    இன்றைய பள்ளி மாணவ மாணவிகளின் நட்பு இது தான் என்று பொத்தம் பொதுவாக கூறியது எந்த விதத்தில் தவறு நண்பரே ...
    இங்கே நாம் யாரையும் - எதையும் கொச்சைப்படுத்த வில்லை .. மாறாக யாரும் ,யாராலும் கொச்சைப்படுத்த படகூடாது என்றே சொல்கிறோம்..
    இங்கே நாம் கொடுத்துள்ள வீடியோ ஒன்று தான் ஆனால் தினம் தினம் ஊடங்கங்களிலும் , நேரிலும் நாம் பார்ப்பவை இதை விட அருவருக்க தக்க விஷயங்கள் உங்களை கவலை கொள்ள செய்யவில்லையா ..?
    ஆண் - பெண் இனக்கவர்ச்சி அதிகம் இருக்கும் +1,+2 பள்ளி பருவத்தில் சேர்ந்து படிப்பதால் ஏற்படும் பாதங்கங்கள் நமக்கு இன்னும் புரியவில்லை என்றால் நமக்கு மூளை வளர்ச்சி குறைவு என்று முடிவு செய்துகொள்ளலாம்.

    ///நானும் பலவருடங்களாக உம்மை பார்த்து கொண்டுதான் இருக்கிறேன் , நீர் தொடர்ந்து இதுபோலவே பேசி கொண்டு இருகிர், இதுதவறு நிறுத்திகொள்ளும்,///

    இந்த இணையதளம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் கூட ஆகவில்லை .. அப்படி இருக்க பலவருடமாக நான் அப்படி என்ன எழுதினேன் நண்பரே .

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன