Monday, January 16, 2012

அழகிப்போட்டியா – ஆபாசப்போட்டியா ..?

அழகிபோட்டி என்றால் என்ன ?


பெண்களை அவர்களின் அங்க அவயங்களை காட்சிபொருளாக்கி,அவர்களின் உடல் அழகுகளை ஆபாசமாக்கி,உன் முகத்திற்கு இவ்வளவு மார்க்,உன் முன்அழகிற்கு இவ்வளவு மார்க்,உன் பின் அழகிற்கு இவ்வளவு மார்க்க , உன் வளைவு நெளிவிற்கு இவ்வளவு மார்க் என்று கால்மேல் கால்போட்டுகொண்டு பெண்களை வக்கிற புத்தியால் ரசித்து ஆணாதிக்க எண்ணம் கொண்ட ஆண்கள் மார்க் போடுவதற்கு பெயர் தான் அழகிப்போட்டி (!)
[இதை விட பெண்களை இழிவுபடுத்த வெறு ஒன்று வேண்டுமா ?]


அழகிபோட்டி ஏன் நடத்தப்படுகிறது ?


முதன் முதலில் மிஸ் வோர்ல்டு (Miss World event) எனப்படும் உலக அழகிப் போட்டி லண்டனில் எரிக் மோர்லீ (Eric Morley ) என்பவரால் 1951-ம் ஆண்டு ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சியாக தொடங்கப்பட்டதுதான் இந்த உலக அழகிப் போட்டி . பொழுதுப் போக்கிற்காக(?) இந்த நிகழ்ச்சியை நடத்தி வந்தார் மோர்லீ என்பவர்.

ஒரு சாதாரணப் போட்டியாக நடத்தப்பட்டு வந்த இந்த அழகிப்போட்டி 1959ம் ஆண்டு பி பி சி (BBC) தனது விளம்பரங்களின் மூலமாக உலகம் முழுவது இந்த பிரபஞ்ச அழகிபோட்டியைப் பற்றி அறிய செய்தது. அதன் பின்புதான் 1960 மற்றும் 1970 ஆண்டுகளில் இந்த உலக அழகிபோட்டி (Miss World Competition) சுமார் 60 மில்லியன் ரசிகர்களுடன் உலகத்தின் டாப் ரேங் போட்டிகளில் ஒன்றாக அனைவராலும் அறியப்பட்டது.

எதுக்கு இவ்ளோ ரசிகர்கள் இந்த அழகிபோட்டிக்கு என்றால் காரணம் பெண்கள் அங்கே காட்சிபொருளாக ஆக்கப்பாடுகிறார்கள் என்பது தான்.

பெண்களிடம் இருக்கும் மிக மிக மிக பெரிய பலவீனங்களில் ஒன்று எப்படிபட்ட படித்த பெண்ணாக, விபரம் தெரிந்த பெண்ணாக இருந்தாலும் நீங்கள் அழகா இருக்கீங்கநீங்க அழகா பேசுறிங்க என்று யார் சொன்னாலும் அவர்களுக்கு கோபமே வராது மாறாக வெளிப்படையாகவோ , மனதிற்குள்ளாகவோ சந்தோசமடைவார்கள் என்பதை பெண்களை விட ஆண்கள் அதிகமாக அறிந்திருகிறார்கள்.

இந்த ஒற்றை பலவீனத்தை வைத்து ஆணாதிக்க சக்திகள் பெண்களை பெண் சுதந்திரம்,பெண் உரிமை என்ற பெயரில் அவர்களை உணர்ச்சியற்ற மிருகங்களாக,போதை பொருளாக கவர்ச்சி பொருளாக்கி ஆண்களின் வக்கிற பார்வையை தூண்டிவிட்டு அழகிபோட்டியை நடத்தி காசு பார்க்கிறார்கள் என்பது தான் தெரிந்த ரகசியம்.  

காசுபார்ப்பது ஒரு கும்பல் மட்டுமல்ல இதில் பல கும்பல் இருக்கிறது. உலக அழகியாக எந்த நாட்டு பெண் தேர்ந்தெடுக்கப்படுகிறாலோ அந்த நாட்டில் இதற்க்கு முன்பு பெண்களின் அழகு சாதன பொருள்களின் விற்பனை குறைவாக இருந்திருக்கும் அதை அதிகரிக்கும் முகமாக அந்த குறிப்பிட்ட நாட்டு அழகிகளை அவர்கள் முன்னதாகவே வியாபார நோக்கத்திற்காக தேர்ந்தெடுத்து விடுவார்கள் என்பதை நம்ப முடியாது ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.  
   
இதுவரை நடத்தப்பட்ட மொத்த உலகப் அழகிப் போட்டிகளில் ஐந்து முறை உலக அழகி பட்டம் வென்ற முதல் மூன்று நாடுகளில் முதல் இடத்தில் இருப்பது இந்தியா. கராணம் அழகி பட்டதை இந்த அழகிகளுக்கு வழங்குவதற்கு முன்பு வரை பெண்களின் அழகு சாதன பொருள்களின் வியாபரம் சொல்லும் அளவிற்கு இருந்ததில்லை இந்தியாவில்.

ஆனால் இப்போது அதுயில்லாமல் வியாபாரமில்லை. எல்லாதுறை பெண்களும் அழகு சாதன பொருள்களின் தான் தங்கள் பணத்தை செலவிடுகிறார்கள். ஆண்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாவது போல் பெண்களுக்கு இது. இந்தியாவிற்கு அடுத்த உலகஅழகி வேண்டும் என்றால் சிறிது காலம் அழகு சாதன பொருள்களை வாங்குவதை குறைத்தாள் போதும்..  


[அழகிபோட்டி அவ்வபோது நடந்தாலும் சினிமா இதை முழுநேர வேலையாக செவ்வனே செய்து வருகிறது.]  





No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன