ஆண்கள் -பெண்களை நிர்வகிக்க கூடியவர்கள் (திருகுரான்)
மதுரை: மதுரையில் வங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ்காரர் ஒருவர் தன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை, நரிமேட்டில் உள்ள பிரசாத் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மொக்கராஜ் மகள் மீனாட்சி (25). மதுரை ஆயுதப்படையில் பெண் போலீசாக இருந்தார். நேற்றிரவு மதுரை அண்ணாநகரில் உள்ள வங்கி ஒன்றின் பணப் பெட்டகத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
நள்ளிரவு 1.15 மணியளவில் தனி அறைக்கு சென்ற அவர் தன் துப்பாக்கியை எடுத்து தாடையில் வைத்து சுட்டு தற்கொலை செய்து கொண்டார். குண்டு வெடித்ததில் மீனாட்சியின் முகம் சிதைந்தது.
துப்பாக்கி வெடிக்கும் சத்தம்கேட்டவுடன் அங்கிருந்த மற்ற போலீசார் தனி அறைக்கு ஓடி வந்து பார்த்தபோது மீனாட்சி ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். உடனே இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் கமிஷன்ர் திருநாவுக்கரசு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் மீனாட்சியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மீனாட்சி தற்கொலை செய்து கொண்ட அறையில் அவர் தன் கையால் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,
எனக்கு தீராத தலை வலியும், குடும்ப பிரச்சினைகளும், பணிசுமைகள் போன்ற காரணத்தால் இந்த முடிவை எடுத்துள்ளேன். இதற்கு வேறு எந்த காரணத்தையும் புகுத்த வேண்டாம்.
நான் எடுத்த முடிவு தப்புதான். கடவுள் கொடுத்த உயிரை எடுக்க எனக்கு உரிமை இல்லை. இறைவா! என்னை மன்னித்துவிடு. இந்த சாவுக்கு யாரும் காரணம் இல்லை. இந்த முடிவுக்கு வேறு யாரும் பொறுப்பு இல்லை என்று அதில் அவர் எழுதியிருந்தார்.
இந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீனாட்சி கடந்த ஒன்றேகால் மாதத்திற்கு முன்பு தான் கரூரில் இருந்து மதுரைக்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://thatstamil.oneindia.in/news/2011/10/12/work-pressure-woman-cop-shot-herself-aid0128.html
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன