Sunday, July 22, 2012

உணர்ச்சியைத் தூண்டும் வகையில் பெண்கள் ஆடை அணியக் கூடாது: ம.பி. அமைச்சர் விஜய்வர்கியா


போபால்: ஆண்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையில் பெண்கள் ஆடை அணியக்கூடாது என்று மத்திய பிரதேச மாநில தொழில் துறை அமைசச்ர் கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்துள்ளார்.
கடந்த 9ம் தேதி குவாஹாத்தியில் 20 ஆண்கள் சேர்ந்து ஒரு சிறுமியை நடுரோட்டில் வைத்து மானபங்கம் செய்த விவகாரம் தொடர்பாக மத்திய பிரதேச மாநில தொழில் துறை அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா கூறுகையில்,
ஆண்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையில் பெண்கள் ஆடை அணியக்கூடாது. பிறர் தங்களைப் பார்த்தாலே மதிக்கும் அளவுக்கு பெண்கள் உடைகள் இருக்க வேண்டும். அவர்களின் பேஷன், வாழ்க்கை முறை மற்றும் நடத்தை இந்திய கலாச்சாரத்தின்படி இருக்க வேண்டும்.
ஆனால் துரதிர்ஷடவசமாக பெண்களின் ஆடைகள் ஆண்களைத் தூண்டும் வகையில் உள்ளன என்றார்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன