Wednesday, February 29, 2012

பெண்களே தாய்மை காலத்தை தள்ளிப் போடதீங்க!


இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் கார், பங்களா என செட்டிலான பின்னரே குழந்தை பெற்றுக் கொள்ளவேண்டும் என்று நினைக்கின்றனர். இதனால் திருமணமாகி 5 ஆண்டுகள் வரை கூட குழந்தை பிறப்பை தள்ளிப் போடுகின்றனர். இது தவறான முடிவு என்று எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள். ஏனெனில் 30 வயதிற்குள் பெரும்பாலான பெண்கள் 90 சதவிகித அளவிற்கு கருமுட்டைகளை இழந்து விடுவதால் அவர்கள் தாய்மை அடைவது கேள்விக்குறியாகிறது என்கின்றனர் என்று சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று பகீர் தகவலை வெளியிட்டுள்ளனர் ஆய்வாளர்கள்.


கரு முட்டை உற்பத்தி



ஒரு பெண் பிறக்கும் போது சராசரியாக மூன்று லட்சம் கருமுட்டைகளோடு பிறக்கிறாள். வயதான பின்னும் கருமுட்டைகள் உற்பத்தியாவதால், குழந்தைப் பேற்றுக்குத் தகுதியாக இருப்பதாக பல பெண்கள் தவறாகக் கருதுகின்றனர். ஆனால் உண்மையில், வயதாக வயதாக கருமுட்டைகள் குறைந்து கொண்டே வருவதால், குழந்தைப் பேறு என்பது கடினமாகி விடுகிறது என்பது ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.



இங்கிலாந்தில் உள்ள ஆண்ட் ரூஸ் மற்றும் எடின்பர்க் பல்கலைக்கழகங்கள், பெண்களிடம் உள்ள கருமுட்டைகள் பற்றிய ஆய்வை மேற்கொண்டன. இதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 325 பெண்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில், 30 வயதிலிருந்து 95 சதவீதப் பெண்கள் அனைவரும் 12 சதவீதமும், 40 வயதுப் பெண் கள் 3 சதவீதமும் கருமுட்டைகளைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.



தாய்மையை தள்ளிப் போடாதீங்க



மேலும், ஒவ்வொரு பெண்ணிடமும் இருக்கும் கருமுட்டைகளின் எண்ணிக்கையில் பெருத்த வித்தியாசம் காணப்படுவதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது. அதன்படி, ஒரு பெண்ணிடம் 20 லட்சம் முட்டைகள் இருந்ததாகவும், இன் னொரு பெண்ணிடம் 35 ஆயிரம் முட்டைகள் மட்டுமே இருந்ததாகவும் ஆய்வுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.



எனவே காலத்தைத் தள்ளிப் போடாமல் கருத்தரிப் பதை விரைவுபடுத்தவேண்டும் என்று பெண்களுக்கு அறிவுரை கூறியுள்ளனர் ஆய்வாளர்கள்.

நன்றி : http://tamil.boldsky.com

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன