Saturday, January 7, 2012

அஞ்சலி குப்தா தற்கொலையும் - எதார்த்த உலகமும்


இன்றைய தேதியில் பெண்கள் நுழைய முடியாத துறை என்று ஏதாவதொன்று இருக்கிறதா என்ன? பெண்கள் எல்லாத்துறைகளில்முன்னேறி சாதனை புரிந்துவிட்டார்கள். இனி அவர்களை சமையற்கட்டுக்குள் அடைத்துப் பூட்டி வைக்க முடியுமா? பெண்கள் சாதிக்க இந்த உலகம் காத்துக்கொண்டிருக்கிறது, இனி அவர்கள் சாதிக்க வேண்டியதுதான் பாக்கி…’ என்று நாம் பலர் சொல்ல கேட்டிருக்கிறோம்.

ஆனால் இதுதான் உண்மையா..?

பெண்கள் இந்த முதலாளித்துவ சமுதாயத்தில் ஒப்பீட்டளவில் முன்பைவிட அதிகமாக இருக்கிறார்கள், இன்றைய நவநாகரிக சமூகத்தில் பெண்கள் எல்லாத்துறைகளிலும் நுழைந்துவிட்டார்கள் என்பதெல்லாம் உண்மைதான்.
அதனினும் உண்மை, நாம் வியப்புடன் பார்ப்பதற்காகவே நம் கண்முன் நிறுத்தப்படும் அந்த பொம்மை பிம்பங்களின் பெருமைக்குப் பின்னே இருப்பது அப்பட்டமான ஆணாதிக்க அதிகார வர்க்கத்தின் கோர முகம் என்றால் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆம் பெண்கள் அதாகிவிட்டார்கள், இதாகிவிட்டார்கள் என்று சொல்லப்படும் பெருமைக்குப் பின்னால் இருக்கும் இன்றைய உண்மைநிலை இதுதான்.

அஞ்சலி குப்தா:

முன்னாள் விமானப்படை அதிகாரியான அஞ்சலி குப்தா தற்கொலை செய்து கொண்டார்…” என்ற செய்தி ஆங்கில நாளிதழ்களின் துணுக்குச் செய்தியாக வந்திருந்ததை நீங்கள் கவனித்திருக்க மாட்டீர்கள். தற்கொலை செய்து கொள்ளும் காரணுங்களுக்கு நம் நாட்டிலா பஞ்சம் என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் தான் பெண் என்ற காரணத்தினாலேயே தனது போராட்டத்தையும் தொடர முடியாமல், வாழவும் முடியாமல் தன் வாழ்வை முடித்துக் கொண்டார்.

டேராடூனில் பயிற்சி முடித்ததும் அஞ்சலி குப்தா விமானப்படை பிரிவின் பெண் அதிகாரியாக 2001ல் பெங்களூருவில் சேர்ந்தார். அங்கு அவர் ஒருவர் மட்டுமே பெண் அதிகாரி. எனவே மூன்று ஆண் அதிகாரிகள் அஞ்சலியை மனதளவிலும், உடலளவிலும் பாலியல் ரீதியாக தொல்லைகள் கொடுத்திருக்கின்றனர். இதை யாரிடம் புகாராக சொல்வதென்று அவருக்கு தெரியவில்லை. விமானப்படை பிரிவின் விதிகளின்படி புகார்கள் அவரது கமாண்டிங் அதிகாரி வழியேதான் வெளிவர வேண்டும். ஆனால், அந்த கமாண்டிங் அதிகாரி மீதுதான் அஞ்சலியின் புகார் இருந்தது.

பல போராட்டத்திற்கு பிறகு நீதிபதி பண்டோபாத்யாயாவின் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவொன்று விசாரணை நடத்தியது. ஆர்.எஸ்.சௌத்ரி, சிரியக் மற்றும் சோப்ரா என்ற மூன்று அதிகாரிகள் மீது பாலியல் புகார் கொடுத்திருந்தார் அஞ்சலி குப்தா. ஆனால், அவரால் தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை என்பதால் அவர் புகார் அளித்திருந்த மூன்று அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டிய தேவை இருக்காது என்று இராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.அதோடு மட்டும் விடவில்லை. அஞ்சலி குப்தாவின் குற்றச்சாட்டுகளை எல்லாம் நிராகரித்ததோடு அவரை டிஸ்மிஸ் செய்து தண்டிக்கவும் செய்தது.

உலகின் மிகப்பெரிய விமானப்படைகளுள் ஒன்றாக விளங்கும் இந்திய விமானப் படைபிரிவில், 800க்கும் மேற்பட்ட பெண் அதிகாரிகள் இருக்கிறார்கள். இவர்களுள் அஞ்சலியின் புகார் மட்டும்தான் வெளிச்சத்துக்கு வந்தது. இராணுவக் கோர்ட்டால் டிஸ்மிஸ் செய்யப்பட்ட முதல் பெண் விமானப்படை அதிகாரி அஞ்சலிதான் என்று ஊடகங்கள் எழுதின. வேறு சில பெண் அதிகாரிகளும் புகார்கள் கொடுத்திருக்கலாம். ஆனால், அதன் விபரங்கள் வெளிச்சதுக்கு வரவில்லை. இப்படி வரவில்லை என்பதாலேயே வேறு யாரும் புகார் கொடுத்திருக்க மாட்டார்கள் என்று சொல்வதற்கில்லை. அஞ்சலி குப்தாவிடம் விமானப்படைப் பிரிவு நடந்ததுக் கொண்ட விதம் அதைத்தான் உணர்த்துகிறது.

பெண்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் இந்த ஒடுக்குமுறைகளை நம்முன் நிறுத்தப்படும் சாதித்துக்காட்டிய பெண்கள்எதிர்க்கொள்வதில்லையா? அவர்களும் நிச்சயம் எதிர்கொண்டிருப்பார்கள். ஆனால், ஏதோ ஒரு வகையில் சமரசம் செய்துக்கொண்டு, விட்டுக்கொடுத்து வாழ்ந்து வருகிறார்கள். இதனை தமது சாமர்த்தியமாகவும் சாதனையாகவும் கருதிக்கொண்டு பேட்டிகள் கொடுக்கிறார்கள். சாதிக்க விரும்பும் பெண் சமூகத்துக்கு அறிவுரையும் கொடுக்கிறார்கள். 

அவர்களில் எவரும் இதனை அம்பலப்படுத்தவோ, எதிர்த்துக் குரல் கொடுக்கவோ தயாரில்லை. அதனால்தான் முன்னுதாரணமான பெண்களாகப் போற்றப்படுகிறார்கள்.

ஏனெனில் இதனை அம்பலப்படுத்த அஞ்சலியைப் போன்ற மனஉறுதியும் ,தைரியமும் தேவைப்படுகிறது. இருப்பினும் ஆணாதிக்க சக்திகளின் நெருக்குதலை தாங்கமுடியாமல் அஞ்சலிகள் தங்களை தாங்களே பலிகொடுக்கவும் வேண்டியிருக்கிறது.

இதில் உச்சக்கட்டம் என்னவென்றால் பணிநீக்கம் செய்யப்பட்டபின் அஞ்சலிகுப்தா பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். கடந்த செப்டம்பர் 11ஆம் தேதியன்று போபாலில் அவரது குரூப் கேப்டன் அமித் குப்தாவின் வீட்டுக்கு சென்றார். தங்கினார். தங்கள் மகனது திருமண வேலைகள் தொடர்பாக அமீத் குப்தாவும் அவரது குடும்பத்தினரும் வெளியே சென்ற சமயத்தில் அஞ்சலி குப்தா தூக்கு மாட்டி தற்கொலை செய்துக்கொண்டார்.

விசாரணையில், 51 வயதான அமீத் குப்தா, அஞ்சலியை திருமணம் செய்துக் கொள்வதாக நீண்ட நாட்கள் கூறிவந்ததும், இருவரும் லிவிங் டு கெதர்அடிப்படையில் ஒன்றாக வாழ்க்கை நடத்தியதும் தெரிய வந்தது. தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு அஞ்சலியை திருமணம் செய்துக் கொள்வதாகவும் அமீத் குப்தா வாக்களித்திருக்கிறார். அதை நம்பிய அஞ்சலி, ஏமாற்றப்பட்டிருக்கிறார். (தற்கொலை செய்துகொள்ள இதுவும் காரணம் என்று சொல்லப்படுகிறது)

அஞ்சலி குப்தா என்ற பெண் படிக்காதவரா ? சட்டம் தெரியாதவரா ? திறமையில்லாதவரா ? அவரை பாலியல் ரீதியாக தொல்லைகொடுத்தவர்கள் பாமரர்களா ? எல்லோரும் படித்தவர்கள் ,திறமையானவர்கள் , தனித்துவமிக்கவர்கள். எதனால் இந்த அவலநிலை அஞ்சலி குப்தாவிற்கு ..?

காரணம் அஞ்சலி குப்தா தன் சக ஊழியர்களை ஊழியர்களாக பார்த்திருக்கிறார் ஆனால் அவரோடு வேலைபார்த்த ஆண்கள் அஞ்சலி குப்தாவை ஒரு பெண் என்று பார்த்தார்களே தவிர சக ஊழியர்களாக பார்க்கவில்லை. மேலும் ஒன்றாக வேலைசெய்கிறோம் என்ற பெயரில் கிடைத்த தனிமை சந்திப்புக்களை தவறாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.

தனிமையும், சந்தர்ப்பமும் கிடைத்தால் யாரும் தடம்புரள தான் செய்வார்கள் அதுவும் பெரிய பொறுப்பில் இருப்பவர்களுக்கு அதிகாரம் இருப்பதால் அவர்கள் தவறு செய்வதற்கு பாதுகாப்பும் இருக்கிறது.இதற்க்கு தான் இஸ்லாம் பெண்களை எந்தநிலையிலும் பெண்கள் என்ற உணர்வுடன் எல்லை கடந்து விடாமல் இருக்க சொல்கிறது.அதை சரிவர பின்பற்றும் எந்த பெண்ணுக்கும் இப்படிபட்ட அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புகள் மிக மிக குறைவு.

இஸ்லாம் பெண்களை எல்லா நிலையிலும் கண்ணியப்படுத்துகிறது.

அந்நிய ஆண்களோடு தனிமையில் இருக்க வேண்டாம் என்கிறது.

அந்நிய ஆண்களின் காம உணர்வை தூண்டும் விதமாக உடை அணிய வேண்டாம் என்கிறது.

அந்நிய ஆண்களோடு சிரித்து ,குலைந்து பேசவேண்டாம் என்கிறது.

அந்நிய ஆண்களோடு ஒன்றாக பயணிக்க வேண்டாம் என்கிறது.

பாதுகாப்பில்லை என்று தோன்றும் இடங்களை கட்டாயம் தவிர்க்க சொல்கிறது.

பெரிய வேலை ,கைநிறைய சம்பளம் , பேரு புகழ் எல்லாம் இருக்கட்டும். – ஒரு பெண் தன் மானத்தை இழந்துவிட்டால் அதை இவைகளால் திரும்ப கொண்டு வர முடியுமா ?




குறிப்பு ::இதில் வேடிக்கை என்ன வென்றால் முஸ்லீம் பெண்களை இஸ்லாம் இழிவுபடுத்துகிறது என்று புலம்பிகொண்டிருக்கும் வினவு இணையதளம் அஞ்சலி குப்தா பாதிக்கப்பட்டதை ரொம்ப வருத்தப்பட்டு எழுதியிருந்தது.  பெண்கள் வேலை செய்யும் இடங்களின் தயவு தாட்சனை யில்லாமல் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்று ஒப்புகொண்டிருக்கிறது. 

இந்த பதிவில் நாம் எழுதியதில் பெரும்பாலும் வினவு தளத்திலிருந்து எடுக்கபட்டது தான் என்றால் பார்த்துகொல்லுங்கள். பெண்கள் முன்னேறுகிறார்கள் என்று சொன்னாலும் அந்த முன்னேற்றத்திற்கு பின்னால் பல ஆணாதிக்க சக்திகளின் காம வெறியாட்டமும் , கொலவெறியாட்டமும் இருக்க தான் செய்கிறது என்பது வினவிற்கு இப்போது தான் மண்டையில் உறைத்திருக்கிறது நல்ல விஷயம் தான்.  


உதவியவை . வினவு.காம் 


சாதனை பெண்களின் சொகக்கதைகள் வந்தவண்ணம் இருக்கிறது 


ஈரோடு : ஈரோடு மாவட்டம் நீலாகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் புவனேஸ்வரன் (30). இவர் சென்னை ஆயுதப்படை போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். அதேபோல், ஈரோடு மாவட்டம், பவானியை சேர்ந்தவர் தங்கமணி (30). இவரும் சென்னை ஆயுதப்படை போலீசாக பணிபுரிந்து வந்தார். இவர்கள் இருவரும் காதல்வயப்பட்டு, திருமணம் செய்துகொள்ளாமல்
ஒரே அறையில் தங்கி வந்தனர்.

இந்நிலையில், புவனேஸ்வரன், ஈரோடு மாவட்டம் திங்களூர் போலீஸ் ஸ்டேசனிற்கு டிரான்ஸ்பர் வாங்கி வந்துவிட்டார். தங்கமணி, தற்போது சென்னையில் பயிற்சி எஸ்.ஐ., ஆக உள்ளார். தங்கமணி, திங்களூர் போலீஸ் ஸ்டேசனில், புவனேஸ்வரன் தன்னை கற்பழித்து விட்டதாகவும், திருமணம் செய்யுமாறு கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாக புகார் செய்திருந்தார்.

புவனேஸ்வரன் மட்டுமல்லாது, அவனின் பெற்றோர் மற்றும் சகோதரி மீதும் தங்கமணி புகார் செய்தார். இந்த வழக்கு ஈரோடு பெருந்துறை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜா, புவனேஸ்வரனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மற்ற மூவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன