Tuesday, August 7, 2012

பெண்களின் கவர்ச்சிகரமான ஆடைகளினால் -ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவது நிரூபனம்

கவர்ச்சியாக உடை அணிந்த பெண்களை காண்பதாலும், அவர்களை நினைத்து கற்பனை உலகில் சஞ்சரிப்பதாலும் ஆண்களின் ஆண்மைக்கு ஆபத்து ஏற்படுகிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. ஆண்களின் ஆண்மையை பறிக்கும் மொபைல்போன், லேப்டாப், மனஅழுத்தம், சூடு போன்றவற்றின் பட்டியலில் தற்போது கவர்ச்சி உடை கண்ணியர்களும் இடம் பெற்றுள்ளனர்.

ஆண்களின் ஆண்மை குறைபாட்டிற்கான காரணம் குறித்து அமெரிக்காவில் 30 ஆண்டுகாலம் ஆய்வு நடைபெற்றது. அதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தன. அறுபது வயதுக்கு மேலான ஆண்களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் புற்று நோயால் தாக்கப்படுவதும், முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண்களிடம் இந்த புற்றுநோய் அறிகுறி மற்றும் ஆண்மைக்குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் கண்டறியப்பட்டது. பாலியல் ரீதியான கிளர்ச்சிக்கு ஆண்களை இட்டுச்செல்லும் பெண்களின் ஆடைப் பழக்கம் ஆண்களிடம் கனவுகளை வளர்த்தும், நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலைக்குத் தள்ளியும் அவர்களை மனம் மற்றும் உடல் சார்ந்த பல்வேறு நோய்களுக்கு கொண்டு செல்கிறதாம்.


உடலை முழுதும் மறைக்கும் ஆடை அணியும் கலாச்சாரத்தைக் கொண்டுள்ள பெண்கள் வாழும் அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் பெரும்பாலும் இல்லை என்பதனால் இதற்கும் ஆடைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா எனும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

பணிபுரியும் இடங்களிலும், பொது இடங்களிலும் சந்திக்கும் பெண்களின் வசீகரிக்கும் தோற்றமும், உடைகள் மறைக்காத உடலின் பாகங்கள் தூண்டிவிடும் செக்ஸ் சிந்தனைகளும், ஆண்களின் மனதில் பதிந்து அவர்களுடைய ஏக்கங்களை விரிவடைய வைத்து ஏமாற்றத்தை அதிகரிப்பதே இந்த ஆண்மைக்குறைவு மற்றும் புரோஸ்ட்ரேட் புற்று நோய் இவற்றின் மூல காரணம் என்று இந்த ஆராய்ச்சி தனது முடிவை ஆதாரங்களுடன் வரையறை செய்திருக்கிறது.



முக்கால்வாசி ஆண்மைக்குறைபாடுகளும் இத்தகையதே என்பது இந்த ஆராய்ச்சியின் தீர்க்கமான முடிவாகும்.நவீனப் பெண்களின் இத்தகைய ஆடைக் கலாச்சாரமும், வசீகரிக்கும் வனப்பை வெளிக்காட்டும் மோகமும், ஆண்களின் மனதில் பல்வேறு கிளர்ச்சிகளை ஏற்படுத்துவதாகவும், அவர்களுடைய ஏக்கங்களை அதிகரிப்பதாகவும், தாம்பத்திய வாழ்வின் திருப்தியைத் திருடிக் கொள்வதாகவும் ரஷ்யாவின் லீனாய்ட் எனும் மருத்துவர் கூறியுள்ளார்.

பெண்களின் கவர்ச்சிகரமான நடத்தையினால் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுகிறது என்ற அதிர்ச்சிகரமான செய்தியாக இருக்கும் அதே வேளையில், ஆண்களும் கவர்ச்சி உடை அணிந்த கன்னியர்களை கண்டுகொள்ளாமல் இருந்தாலே ஆண்மையை பாதுகாத்துக்கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள்.


2 comments:

  1. islamya sattangal niraivanathu enbathu nirupanam

    ReplyDelete
  2. islamya sattangal niraivanathu enbathu nirupanam

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன