Thursday, December 27, 2012

ஏன் இந்த பாரபட்சம் இந்தியாவில் ?

5 வருடங்களுக்கு முன்பு ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆயிஷா மீரா என்பவரது குடும்பம் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இன்னும் நீதிக்காககாத்திருக்கிறது.

பாலியல் பலாத்காரத்தால் மருத்துவமனையில் படுக்கையில் கிடந்த படி தனது உயிருக்கு போராடி வரும் 23 வயது மருத்துவ கல்லூரி மாணவிக்காக குரல் கொடுக்க ஏராளமான ஊடகங்களும்,மனித உரிமை ஆர்வலர்களும் தேசத்தின் தலைநகரில் ஆர்பாட்டம் நடத்திஅரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தினர்.ஆனால் விஜயவாடாவில் இதே போன்று பாதிக்கப்பட்ட மருத்துவ கல்லூரி மாணவியின் குடும்பத்தினர் சம்பவம் நடந்து ஐந்து ஆண்டுகளுக்கு பிறகும் நீதிக்காக காத்திருக்கிறார்கள்.





சரியாக ஐந்து வருடங்களுக்கு முன்பு,அதாவது டிசம்பர் 26, 2007 ல் ஆயிஷா மீரா, என்ற 19 வயது மருந்தியல் மாணவியை ,அவள் தங்கியிருந்த பெண்கள் விடுதியில் உள்ளே வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிட தக்கது.

இந்த பெண் ஆபாசமாக உடை அணிய வில்லை.ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு சுற்றித்திரிய வில்லை.மதுவினில் ஊறி திளைக்கவில்லை.

ஆனால் தான் தங்கியிருந்த பெண்களின் விடுதியினிலே வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாள்.காரணம் முஸ்லிம் பெண் என்பதனால் ,கேட்பதற்கு நாதியில்லை என்பதனால்,அதேபோல் நீதியும் இன்றுவரை அக்குடும்பத்திற்கு மறுக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் தலித் பெண்கள் பாதிக்கப்பட்டாலும் நீதி மறுக்கப்பட்டு வருகிறது,இதற்கு தமிழகம் நல்ல உதாரணம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன