நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக..ஆமீன்.
சமீபத்தில் நான் பார்த்த தகவல் மிக சுவாரசியமாக இருந்தது. பழம்பெரும் அமைப்பான "Inter-Parliamentary Union", சில மாதங்களுக்கு முன்பாக, பாராளுமன்றங்களில் உள்ள பெண்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களை வெளியிட்டிருந்தது. சுமார் 188 நாடுகளின் தகவல்களை கொண்டு தரவரிசையை வெளியிட்டிருந்தது.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பல நாடுகள் அந்த பட்டியலில் முதல் 50 இடங்களில் இடம்பிடித்திருந்தன.
பெண்களை அதிகமாக பாராளுமன்றத்திற்கு அனுப்பும் முஸ்லிம் நாடுகளின் வரிசையில் துனிசியா இரண்டாம் இடத்தில் இருக்கின்றது. இங்கு பாராளுமன்ற உறுப்பினர்களில் 26.3% பேர் பெண்கள். பொது இடங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நாட்டில் இன்று ஹிஜாபுடன் பாராளுமன்றத்தில் பெண்கள்.
துனிசியா நம்மை ஆச்சர்யப்படுத்த இன்னொரு காரணமும் உண்டு. புரட்சிக்கு பிறகு துனிசியாவில் ஆட்சியை பிடித்தது மீடியாக்களால் இஸ்லாமிய கட்சி என்று அழைக்கப்படும் Ennahda கட்சியே. மீடியாக்களால் இஸ்லாமியவாதிகள் என்று அழைப்பட்ட இவர்கள் அதிக அளவிலான பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தியிருந்தனர். முடிவோ, இன்று துனிசிய பாராளுமன்றத்தில் நிறைய பெண் உறுப்பினர்கள்.
ஆச்சர்யங்களுக்கு எல்லாம் மகுடம் வைத்தார் போல இருந்தது, ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றம் குறித்த தகவல் தான். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளின் வரிசையில் இந்த நாட்டிற்கே முதல் இடம். ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்தில் 27.7% பேர் பெண்கள்.
நம் அண்டை நாடுகளான பாகிஸ்தானுக்கும் (22.2%), பங்களாதேஷுக்கும் (18.6%) முறையே 47 மற்றும் 63-வது இடங்கள். நம் நாடு 10.8% பெண் உறுப்பினர்களுடன் 99-வது இடத்தில் இருக்கின்றது.
இப்போது பதிவின் முக்கிய பகுதிக்கு வருவோம். பெண்ணுரிமை குறித்து அதிகம் பேசும் அமெரிக்கா, பெண்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பும் /தேர்ந்தெடுக்கும் விசயத்தில் பின்னணியிலேயே இருக்கின்றது. பிரான்சும் அப்படியே. இவை முறையே 71 மற்றும் 61-வது இடத்தில் இருக்கின்றன. அமெரிக்க நாடாளுமன்றத்தில் 16.8% பேர் மட்டுமே பெண்கள்.
இந்த தகவல்களை கொண்டு எந்த முடிவிற்கும் வருவது இந்த பதிவின் நோக்கமல்ல. மாறாக, தாங்கள் பெரிதும் விரும்பும் ஒரு மார்க்கம் தங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தால், இத்தனை பெண்கள் தலைவர்களாக வந்திருக்க முடியாது.
அதுபோல, யாரை நோக்கி 'பெண்களை அடக்குமுறைகளுக்கு உள்ளாக்குகின்றனர்' என்று குற்றம் சாட்டப்படுகின்றதோ, அவர்களும் இத்தனை பெண்களை பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்க முடியாது.
தெளிவான ஆதாரங்கள் நம் கண்முனே இருக்கின்றன. புரிந்துக்கொள்ள முடிந்தவர்கள் புரிந்துக்கொள்ளட்டும்.
இறைவனே எல்லாம் அறிந்தவன்.
My Sincere thanks to:
1. Brother Garibaldi of Loonwatch.
References:
1. Women in national parliaments - Inter-Parliamentary Union (situation as of Nov, 2011). link
2. Women in Parliament: Islamists in Tunisia Field More Women as Candidates than the Percentage of Women in the US Congress - Loonwatch. link
3. Inter-Parliamentary Union - Wikipedia. link
ஜசாகல்லாஹ் : ஆஷிக் அஹமத் அ http://www.ethirkkural.com/2012/02/blog-post_28.html
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன